Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…. இன்று காலை முதல்….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 வாரமாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ.95.76- க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ.89.90- க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Categories

Tech |