நாமக்கல் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் கொரோனாவிற்கு 5,825 பேர் பாதிக்கப்பட்டது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 1 வாரத்திற்கு முன்பு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் ஒரு நாள் பாதிப்பு 300ஆக இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் நோய் தொற்றுக்கு 700க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதனையடுத்து கடந்த மே 22ஆம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமாக 24,598 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய கணக்கெடுப்பின்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,423 ஆக அதிகரித்துள்ளது.
இதனைதொடர்ந்து ஒரே வாரத்தில் மாவட்டம் முழுவதிலும் 5,825 பேர் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவிற்கு 234 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மூச்சுத்திணறல், காய்ச்சல், தலைசுற்றல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் 18 வயது மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.