பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் “எஃப்.ஐ.ஆர்” படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது அறிமுக இயக்குனர் மனோ ஆனந்த் இயக்கும் “எஃப்.ஐ.ஆர்” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் பிரபல நடிகை மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூன்று ஹீரோயின்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா அலை வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு திரையரங்கங்கள் மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகிறது. அந்த வகையில் “எஃப்.ஐ.ஆர்” திரைப்படமும் பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.