நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் என்பதால், அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் உத்திரப்பிரதேசம் மாநிலம் எடவாடவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழை காட்டி அவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிரோசாபாத் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே மாத சம்பளம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.