Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவையில் ”காவல்துறை உச்சகட்ட தயார்” ஆணையர் பேட்டி …!!

கோவையில் காவல்துறை உச்சகட்ட தயார் நிலையில் இருக்கின்றது என்று கோவை காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு இலங்கை வழியாக ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பினர் 6 பேர் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் , விநாயகர் சதுர்த்திக்கு தாக்குதல் நடத்த இருப்பதாகவும் மத்திய உளவுதுறை தமிழகத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.இதையடுத்து கோவை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கோவை காவல் ஆணையர் சுமித் சரண் செய்தியாளர்களிடம் பேசுகையில் ,

Image result for Coimbatore Police Commissioner Sumit Saran

6 பயங்கரவாதிகள் ஊடுருவல் வந்த தகவலால் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது  வெளியிடப்பட்ட புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறை உச்சகட்ட தயார் நிலையில் இருக்கின்றது. பயங்கரவாதிகள் இருக்கின்றார்களா என்று  தீவிரமாக தேடி வருகின்றனர்.அனைத்து முக்கிய வழிபாடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Categories

Tech |