குடும்பத்தினர் 14 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக மாஸ்டர் பட நடிகர் உருக்கத்துடன் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மேயாத மான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அமலாபாலின் ஆடை படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விஜய் மற்றும் விஜய் சேதுபதிநடிப்பில் வெளியன மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய ரத்னகுமாரின் குடும்பத்தினர் 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, 15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு” என்று பதிவிட்டுள்ளார்.
15 மாத குழந்தை முதல் 83 வயது பாட்டி வரை என் குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கும் கொரோனா. அப்பா, பாட்டி, தம்பியின் மனைவி, என் மாமியார் என சிலர் Hospitalize செய்யப்பட்டு தேரினர். கடந்த 20 நாட்களாக நேர்ந்த பல மன உளைச்சல்களை கடந்து இன்று மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பியது வீடு🙏 🙏
— Rathna kumar (@MrRathna) May 29, 2021