Categories
தேசிய செய்திகள்

இப்படியே போனால் இன்னும் 2 ஆண்டுகளாகும்… ஆய்வு கூறும் தகவல்…!!!

இந்தியாவில் இந்த வேகத்தில் தடுப்பூசி செலுத்தினால் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வறிக்கை கூறுகின்றது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இருப்பினும் மக்கள் ஒருசில அச்சம் காரணமாக தடுப்பூசி போடுவதற்கு முன் வர மறுக்கின்றனர். இதனால் நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருகின்றது.

இதுகுறித்து ஆய்வாளர் எரிங் டிங் என்பவர் நடத்திய ஆய்வின்படி சீனா தடுப்பூசி செலுத்துவதில் அதிக அளவு முனைப்பு காட்டுவதால் இன்னும் 80 நாட்களில் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவர் கணித்துள்ளார். ஆனால் இந்தியர்கள் தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டாத காரணத்தினால் காலதாமதம் ஏற்பட்டு வருகின்றது. இதே வேகத்தில் சென்றால் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று எச்சரித்துள்ளார்.

Categories

Tech |