பிரபல நடிகர் சத்யராஜ் தயவு செய்து அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது.
ஆனால் பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். மேலும் திரை பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களையும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தையும் கூறிவருகின்றனர். அந்தவகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் சத்யராஜும் கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/tv/CPdGwVqjUUW/?utm_medium=copy_link