Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்…. மாவட்ட கலெக்டரின் தகவல்….!!

வேலூரில் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வந்தபின் செலுத்தப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. எனவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி நான்கு வாரங்களுக்கு பிறகு 2- வது டோஸ் தடுப்பூசியை பொதுமக்கள் செலுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வேலூர் காந்தி ரோட்டில் உள்ள அரிஹந்த் மைதானம், காட்பாடி காந்தி நகரில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகம், ஊரீசு கல்லூரி வளாகம், பேரணாம்பட்டு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி, குடியாத்தம் சந்தைப்பேட்டையில் உள்ள சமுதாயக்கூடம் ஆகிய 5 இடங்களில் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றது.

இந்த முகாமில் 45 வயது மேல் இருபவர்களுக்கு மட்டும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்பின் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் பார்த்திபன் கூறியுள்ளார். மேலும் 18 வயது முதல் 44 வயதிற்கு கீழ் இருப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வந்தபின் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாவட்ட கலெக்டர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |