Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தில் இருந்து மோகன் ராஜா விலகிவிட்டாரா?… பரவிய வதந்தி… முற்றுப்புள்ளி வைத்த படக்குழு…!!!

லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தில் இருந்து இயக்குனர் மோகன் ராஜா விலகியதாக தகவல் பரவி வந்தது.

மலையாள திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் லூசிபர். பிரித்திவிராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், டோவினோ தோமஸ், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம் சரண் கைப்பற்றினர். மேலும் சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. ஏனெனில் நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு லூசிபர் கதையில் சில மாற்றங்கள் செய்யுமாறு மோகன் ராஜாவிடம் சொல்லியிருந்தார்.

ஆனால் மோகன்ராஜா செய்த மாற்றங்கள் சிரஞ்சீவிக்கு திருப்தியாக இல்லாததால் இந்த படத்தில் இருந்து மோகன் ராஜா விலகிவிட்டதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய மோகன் ராஜாவுக்கு லூசிபர் தெலுங்கு ரீமேக் படத்தை தயாரிக்கும் நிறுவனம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும்  நடிகர் சிரஞ்சீவியும் மோகன் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |