புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. ஆண்டுதோறும் சுமார் 70 லட்சம் புகையிலை தொடர்பான உடல்நலக் குறைபாடுகளால் மனிதர்கள் உயிரிழக்கின்றனர்.
புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் 1987ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு நாளாக அறிவித்துள்ளது. புகையிலையால் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றது. அதனால் புகையிலை பயன்படுத்துவோர், குடும்பம், குழந்தைகளை நினைவில் வைத்து இன்றைய நாளில் இருந்து புகையிலையை தவிருங்கள்.