மர்ம விலங்குகள் ஆடுகளை கடித்து கொன்ற சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் இருபதுக்கும் அதிகமான ஆடுகளை வளர்த்து வருகிறார். இதனை அடுத்து மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்ற ஆடுகளை மாலை நேரத்தில் தனது வீட்டின் ஆட்டு கொட்டாயில் கட்டிப் போட்டுள்ளார். அப்போது காலை நேரத்தில் எழுந்து பார்த்த போது 15 ஆடுகள் இறந்து கிடைந்துள்ளது. மேலும் சில ஆடுகள் உயிருக்குப் போராடி கொண்டிருக்கும் நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தேவராஜ் உடனடியாக காவல்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டுள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இரவு நேரத்தில் மணலூர் கிராமத்திற்குள் நுழையும் மர்ம விலங்குகள் ஆடு, மாடுகளை கடித்துக் கொன்று விட்டு செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.