மரகத நாணயம் பட இயக்குநர் ஏ.ஆர்.கே சரவணன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆதி நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியிருந்த இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்திருந்தார் . மேலும் முனீஸ்காந்த், ஆனந்தராஜ், காளி வெங்கட், டேனியல், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டில்லிபாபு தயாரித்த இந்த படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைத்திருந்தார். சமீபத்தில் மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் டில்லி பாபு ட்விட்டர் ஸ்பேஸில் தெரிவித்திருந்தார்.
#MaragathaNanayam2 கதைக்கருவை தயாரிப்பாளர் @AxessFilm டில்லிபாபு சாரிடம் கூறியிருக்கிறேன்..
அதற்கு முன்பு.. @SathyaJyothi_
நிறுவனத்துடன் விரைவில் ஒரு படத்தை துவங்க உள்ளேன்..இவற்றையெல்லாம் விட.. கொரோனாவிலிருந்து தமிழகம் விரைவில் மீண்டெழ வேண்டும் என்பதே என் பிராத்தனைகள் 🙏
— Ark Saravan (@ArkSaravan_Dir) May 30, 2021
இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘மரகத நாணயம் 2 கதைக்கருவை தயாரிப்பாளர் டில்லிபாபு சாரிடம் கூறியிருக்கிறேன். அதற்கு முன்பு சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடன் விரைவில் ஒரு படத்தை துவங்க உள்ளேன். இவற்றையெல்லாம் விட கொரோனாவிலிருந்து தமிழகம் விரைவில் மீண்டெழ வேண்டும் என்பதே என் பிராத்தனைகள்’ என தெரிவித்துள்ளார்.