Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அங்க யாரும் போக கூடாது… தடுப்புகள் வைத்த அதிகாரிகள்… தீவிரமாக நடைபெறும் பணி…!!

தனிமைப்படுத்தப்பட்ட  பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் பேரூராட்சி பகுதியில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நெகமம் பேரூராட்சி பகுதிகளில் அதிகளவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சுகாதாரத்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் சிலர் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தினர் அண்ணா நகர் பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து வெளியிலிருந்து உள்ளேயும், உள்ளே இருந்து வெளியேயும் யாரும் செல்ல முடியாத படி தடுப்புகள் வைத்து அடைத்து விட்டனர். அதன் பிறகு துப்புரவு பணியாளர்கள் அப்பகுதி முழுவதும் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

Categories

Tech |