சட்ட விரோதமாக வேனில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வேனில் 4 பெட்டிகளில் கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கும்பரஅள்ளி பகுதியில் வசிக்கும் செந்தில் மற்றும் ராமன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதன் பின் மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 14000 ரூபாய் மதிப்புள்ள 192 மது பாட்டில்களையும், சரக்கு வேனையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.