Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஜாலியா தான் இருந்தோம்… நண்பர்களின் அலறல் சத்தம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

ஆற்றில் மூழ்கி 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செம்படம் புதூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் லோகநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் செம்படம் புதூரில் இருக்கும் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக லோகநாதன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். இதனை அடுத்து குளித்துக் கொண்டிருக்கும் போது லோகநாதன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த லோகநாதனின் நண்பர்கள் அலறி சத்தம் போட்டுள்ளனர். அந்த சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய லோகநாதனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |