Categories
தேசிய செய்திகள்

அடுத்த வழக்கு ”அப்பா,மகன் கைது” செப்.3_இல் உத்தரவு …!!

ஏர்செல்-மேக்சிஸ் நிறுவன வழக்கின் கைது செய்வதற்கான தடையை நீட்டிக்கும் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் செப்.3_ஆம் தேதி உத்தரவை பிறப்பிக்கின்றது.

ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடுகளை செய்த வகையில் மோசடி நடைபெற்றதாகவும், அன்னிய முதலீட்டை பெறுவதில்பண பரிமாற்றம் செய்வது சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்த குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

Image result for Aircel-Maxis

இந்த வழக்கில்  சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தங்களை கைது செய்யாமல் இருப்பதற்காக சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் தரப்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது.ஏற்கனவே தொடர்ச்சியாக இந்த மனு விசாரிக்கப்பட்டு வந்த போதெல்லாம் தங்களுக்கு உடனடி கைது செய்வதற்கான அனுமதி வழங்க வேண்டும் என சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் அவர்களை கைது செய்வதற்கான தடை இன்றுடன் நிறைவுவடையும் நிலையில் நீதிபதி ஷைனி முன்பு இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது டெல்லி ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு  நீதிமன்றத்தில் நடைபெற்றது.இன்று உத்தரவுகள்   பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீதிபதி இந்த வழக்கில் முன்ஜாமீன் மீதான உத்தரவை வருகின்ற செப்டம்பர் 3 ஆம் தேதி பிறப்பிக்க உள்ளதாக ஒரு உத்தரவை பிறப்பித்து வழக்கை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் .

Categories

Tech |