Categories
தேசிய செய்திகள்

லட்சத்தீவுகள் விவகாரம்… தீர்மானம் நிறைவேற்றம்…!!!

லட்சத்தீவுகள் நிர்வாக அதிகாரியை திரும்பப் பெறக் கோரி கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராய் விஜயன் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

லட்சத்தீவு பகுதியில் புதியதாக நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா படேல் சில மாற்றங்களை கொண்டு வந்தார். இதையடுத்து இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் லட்சத் தீவு பகுதிகளில் மாட்டிறைச்சிக்கு தடை என்றும், மதுபான கடைகளுக்கு அனுமதி அளித்ததாகவும் கூறியிருந்தார். மேலும் அரசின் திட்டங்களுக்காக பொது மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தை அமல் படுத்தவும் தெரிவித்தார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டங்களுக்கு எதிராக பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து கேரள அரசு, லட்சத்தீவில் அமல்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில் லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேலை நீக்க கோரி கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை முதல்வர் பினராய் விஜயன் கொண்டு வந்துள்ளார். கேரளாவில் முதல்வராக பதவியேற்றவுடன் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானம் இதுவாகும்.

Categories

Tech |