தேனியில் ஒரே நாளில் 521 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவை தடுப்பதற்கு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தேனியில் ஒரே நாளன்று 521 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 35,893 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 689 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 நபர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.