தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் காய்கறி விற்பனை சரிவு ஏற்படாத வகையில் அதிகாரிகள், வணிகர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என வேலூர் ஆட்சியர் பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார். மளிகை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய வேண்டும். கடைகளில் கூட்டம் கூடினால் சீல் வைக்கப்படும். டோர் டெலிவரி செய்யும் வாகனங்களுக்கு அதிகாரிகளை அணுகி பாஸ் பெறலாம் என்று அவர் கூறியுள்ளார்.