Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இனி யாரும் இப்படி செய்யக்கூடாது… கூட்டமாக திரண்ட பொதுமக்கள்… எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி இறைச்சி கடைகயை திறந்து வியாபாரம் செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுபடுத்த தளர்வில்லா முழு ஊரடங்கு வருகிற 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள முகமது புறா தெருவில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த கடையின் முன்பு பொதுமக்கள் கூட்டமாக திரண்டுள்ளனர்.

இதுக்குறித்து தகவலறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையின் முன்பு திரண்டிருந்த பொதுமக்களை எச்சரிக்கை விடுத்து வீடுகளுக்குச் செல்லுமாறு விரட்டி அடித்துள்ளனர். மேலும் காவல் துறையினர் வருவதை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதனையடுத்து இறைச்சி விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |