விதிமுறைகளை மீறி திறந்து வைத்து விற்பனை செய்த 3 இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி உள்ளிட்ட அனைத்துக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் இருக்கும் ஒரு சந்து கடை மற்றும் தேவதானம் ரயில்வே கேட் அருகில் இருக்கும் ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 3 கடை உரிமையாளர்களையும் எச்சரித்ததோடு, தலா 5000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். மேலும் விதிமுறைகளை மீறி கடையை திறந்தால் பூட்டி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் கடை உரிமையாளர்களை எச்சரித்துள்ளனர்.