Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இந்த வேலை வேற நடக்குதா… பதுக்கி வைக்கப்பட்ட பொருள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சாராய ஊறலை பதுக்கி வைத்திருந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள கரும்புலி பட்டியில் சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மணப்பாறை காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறலை  கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்து விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராய ஊறல் போட்ட குற்றத்திற்காக கோபிநாதன் மற்றும் மாரியப்பன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |