Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேங்கி கிடந்த மழைநீர்…. முதியவர் மூழ்கி பலி…. கன்னியாகுமரியில் சோகம்….!!

சாலையில் தேங்கிக் கிடந்த மழை நீரில் முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வட்டபழஞ்சி பகுதியில் மேரி கமலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பால் வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மேரிகமலம் எப்போதும் போல் கடையை திறப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் 3 நாட்களாக பெய்த கன மழையால் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடந்ததால் மேரிகமலம் தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருக்கும்போது திடீரென சாலையில் இருக்கும் பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டார்.

அந்த நேரத்தில் உதவிக்கு யாரும் இல்லாததால் முதியவர் தண்ணீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து சூரியன் உதித்த பின் அவ்வழியாகச் சென்றவர்கள் மேரி கமலத்தின் சடலம் தண்ணீரில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து  தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் மேரி கமலம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |