Categories
தேசிய செய்திகள்

SWEET NEWS: ஆயுர்வேத மருந்திற்கு ஆந்திர அரசு ஒப்புதல்….!!!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ண பட்டியில் ஆனந்தைய்யா என்பவர் தயாரித்து வழங்கும் கொரோனாவிற்கு எதிரான சிறந்த எதிர்ப்பு சக்தி ஆயுர்வேத மருந்திற்க்கு ஆந்திர அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. லேகியத்திற்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ள ஆந்திரா அரசு, கண்ணில் விடப்படும் சொட்டு மருந்துக்கு தடை விதித்துள்ளது. கிருஷ்ண பட்டணம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தையா , கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனாவுக்கு லேகியம், கசாயம் ஆகிய நாட்டு மருந்துகளை  பொதுமக்களுக்கு வழங்கி வந்தார்.

பல்வேறு வகையான மூலிகை பொருட்களை கொண்டு தயார் செய்யப்படும் அந்த மூலிகையை அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல், அண்டை மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் அதிக அளவு வாங்குகிறார்கள். இந்த நிலையில் அந்த மருந்து பற்றி ஆயுஸ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் பக்கவிளைவுகள் இல்லை என நிரூபணம் ஆனதால் அந்த மருந்துக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Categories

Tech |