நடிகை பிரணிதா சுபாஷ் தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் திரையுலகில் நடிகை பிரணிதா சுபாஷ் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான உதயன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாஸு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார் . இந்நிலையில் நேற்று நடிகை பிரணிதா சுபாஷ் தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘கொரோனா காலம் என்பதால் திருமணத்திற்கு யாரையும் அழைக்கவில்லை. அதனால் என்னை மன்னித்துவிடுங்கள்’ என பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகை பிரணிதா சுபாஷின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.