Categories
தேசிய செய்திகள்

ஒரே காலில் 9 விரல்களுடன் பிறந்த குழந்தை… கர்நாடகாவில் நடந்த ஆச்சரிய சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு ஒரு காலில் மட்டும் 9 விரல்கள் இருந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹோசாபெட் என்ற பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஒரு காலில் மட்டும் ஒன்பது விரல்கள் இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், இந்த விரல்களால் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவர் தெரிவிக்கும்போது இதுபோன்று அரிய நிகழ்வு இதற்கு முன் நடந்தது இல்லை. குழந்தையும், தாயும் நலமாக இருக்கின்றனர். குழந்தை வளரும் போது இந்த விரல்களுடன் தானாக நடக்கப் பழகிக் கொள்ளும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |