Categories
தேசிய செய்திகள்

3 மாத அடிப்படை ஊதியம் எடுத்துக் கொள்ளலாம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி பெரும் நிதி நெருக்கடியை சந்தித்தனர். அதனால் அரசு சார்பாக பொருளாதார சலுகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. அதன்படி பிஎஃப் சேமிப்பு பணத்தை மக்கள் உடனடியாக எடுத்து பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு வழிவகை செய்தது.

பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களின் கணக்குகளில் இருந்து முன்பணம் எடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மூன்று மாத அடிப்படை ஊதியம் அல்லது 75% வைப்பு தொகையில் குறைவான முன் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. அதன் பாதிப்பை கருத்திற்கொண்டு பிஎப் சந்தாதாரர்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |