சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில்,ஒரு தம்பதி இனி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1978 -2015 வரை ஒரு தம்பதி, ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என விதிமுறை இருந்தது. அதன்பிறகு 2015ஆம் ஆண்டில் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்நிலையில் தற்போது மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி அளித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories