அமெரிக்காவில், மாணவிகள் இருவருக்கு உறவினர் ஒருவர் வருடக்கணக்கில் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸின் சான் ஆண்டோனியோ என்ற பகுதியில் வசிக்கும் 37 வயது நபர் ஆஸ்கர் அல்பர்டோ பினல். இவர் தன் உறவினர்களான இரண்டு பெண்களுக்கு வருடக்கணக்கில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த பெண்களுக்கு நெருக்கமான நபர் ஒருவர் காவல்துறையினரிடம், இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அல்பர்டோவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட இருவரும் பள்ளி மாணவிகள் என்று தெரியவந்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர், அந்த நபர் மீது சிறுவர்களிடம் மோசமாக நடந்து கொள்ளுதல், பாலியல் துன்புறுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.