தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த உதயன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ப்ரணிதா. இவர் அதன் பின்பு கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி என்ற படத்திலும், சூர்யா நடிப்பில் வெளியான மாசு என்ற மாசிலாமணி என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். கன்னடம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தொழிலதிபர் நிதின் ராஜன் என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். கொரோனா ஊரடங்கு என்பதால் திருமணத்தில் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த பின் கொரோனா காலம் என்பதால் திருமணத்திற்கு அழைக்கவில்லை. அதனால் என்னை மன்னிக்கவும் என்று தெரிவித்துள்ளார்.