தமிழகத்தில் குழந்தை திருமணத்தை நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் குழந்தைத் திருமணம் என்பது தற்போது அதிக அளவில் நடந்து வருகின்றது. பெண்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் அவர்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கின்றனர்.18 வயது நிரம்பாத குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். இது தெரிந்தும் பலர் ரகசியமாக தங்களது பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள் மட்டுமின்றி திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.