Categories
உலக செய்திகள்

பள்ளியில் புதைக்கப்பட்டிருந்த 215 மாணவர்களின் உடல்கள்.. அரசுக்கு எழுந்துள்ள கோரிக்கை..!!

கனடாவின் ஒரு மாகாணம் முழுவதும் ரேடார் மூலம் சோதனை மேற்கொள்ள கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் Kamloops பகுதியில், பூர்வ குடியினர் பள்ளி அமைந்துள்ளது. அந்த பகுதியில் ரேடார்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் 215 மாணவ-மாணவிகளின் சடலங்கள் கண்டறியப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எனவே சட்டமன்றங்களில் அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டது. பல்வேறு இடங்களில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக குழந்தைகள் காலணிகள் வைக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, FSIN என்ற பூர்வ குடியினர் இறையாண்மை கூட்டமைப்பு, அரசாங்கத்திற்கு  மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது.

அதாவது Saskatchewan மாகாணத்தின் அனைத்து பூர்வகுடியினரின் பள்ளிகள் இருக்கும் பகுதிகளை ராடார் உதவியுடன் சோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கிறதா? என்று கண்டறிவதற்கான முயற்சிகளை செய்யுமாறு அரசிற்கு கோரிக்கை விடுத்திருக்கிறது.

Categories

Tech |