குக் வித் கோமாளி பிரபலம் ஷகிலா சாலையோரம் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷகிலா. இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வித விதமான உணவுகளை சமைத்து அசத்தினார். இறுதிப் போட்டிக்கு தேர்வான ஷகிலா சிறப்பாக சமைத்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மேலும் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட ஷகிலாவின் இமேஜை இந்த நிகழ்ச்சி முற்றிலுமாக மாற்றியது. தற்போது இவரை அனைவரும் ஷகிலா அம்மா என அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் சாலையோரம் வாழும் ஏழை மக்களுக்கு ஷகிலா உணவு வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘உங்களுக்கு இரண்டு கைகள் இருக்கிறது. ஒன்றை உங்களின் உதவிக்காகவும் மற்றொன்றை பிறருக்கு உதவுவதற்காகவும் பயன்படுத்துங்கள். உங்களால் முடிந்த அளவு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள்’ பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.