வாலிபரை தாக்கிய குற்றத்திற்காக டிரைவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருஞானமூர்த்தி. அந்தப் பகுதிக்கு அருகில் உள்ள இளங்காடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் மற்றும் நல்லசென்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர்கள் மூவரும் வல்லத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வல்லம் ஆலங்குடி சாலையில் மண் எடுக்கும் இடத்தில் மூன்று பேரும் பணியில் இருந்துள்ளனர்.
அந்த சமயத்தில் சக்திவேல் திருஞானமூர்த்தி லாரியில் இருந்து தண்ணீரை எடுத்து குடித்துள்ளார். இதனை திருஞானமூர்த்தி கண்டித்துள்ளார். அப்போது அருகில் இருந்த தினேஷ் திருஞானமூர்த்தியிடம் ஏன் தண்ணீருக்காக சண்டை போடுகிறாய் என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த திருஞானமூர்த்தி தினேஷை தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் கிடந்த கம்பியை எடுத்து அவரை தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருஞானமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.