Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சோதனைச் சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு…. கட்டுப்பாட்டை இழந்த லாரி…. காயமடைந்த காவல்துறையினர்….!!

சோதனைச் சாவடி மீது லாரி மோதிய விபத்தில் சப் இன்ஸ்பெக்டரும் பெண் போலீசும் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தஞ்சை மாவட்டத்தில் ஆங்காங்கே தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர்  தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை கோடி அம்மன் கோவில் அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதனருகில் கம்பிகளால் ஆன தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் பந்தல் அமைக்கப்பட்ட இடத்தில் நின்று வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது தஞ்சையில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான சாக்கு பைகளை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக சோதனைசாவடியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் மற்றும் பந்தல் மீது மோதி உள்ளது. இதில் பந்தல் கீழே சரிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் சேவியர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெண் போலீஸ் காயத்ரி என்பவருக்கும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் அதிர்ச்சியடைந்த சக போலீசார் உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லாரியை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |