கசகசா – 1 ஸ்பூன்
பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 2 பல்
பச்சை மிளகாய் – 4
பட்டை, லவங்கம் – தலா 1
சோம்பு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பட்டை, லவங்கம், சோம்பு ஆகியவற்றை நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.பின் தனியே பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல் மற்றும் கசகசாவையும் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி , மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து, வதக்க வேண்டும்.பின்னர் அதனுடன் அரைத்த தேங்காய் விழுது மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு கறிவேப்பிலை , மல்லிஇலை தூவி இறக்கினால் சுவையான தக்காளி குருமா தயார் !!!