தொழில்நுட்ப கல்லூரிகளின் தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அரியர் தேர்வு எழுத ஜூன் 4 முதல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது. முதலாம், மூன்றாம், ஐந்தாம், ஏழாம் பருவம் பயின்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் www.tndte.gov .in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த இணையதளத்திற்கு சென்று மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என சற்று முன் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதையடுத்து இந்த தொழில்நுட்ப கல்லூரிகளின் தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அரியர் தேர்வு எழுத ஜூன் 4 முதல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நடப்பு செமஸ்டர்கான தேர்வு ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூலை 14 வரை ஆன்லைனில் நடைபெறும். இதற்கான தேர்வு கட்டணத்தை ஜூன் 10-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.