Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

அயர்லாந்திலிருந்து, போலந்திற்கு சென்றுகொண்டிருந்த விமானம் திடீரென்று ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அயர்லாந்திலிருந்து Ryanair நிறுவனத்தின் விமானம், சுமார் 160 பயணிகளுடன் போலந்து நாட்டிற்கு நேற்று புறப்பட்டு சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இரவு சுமார் எட்டு மணிக்கு விமானம் திடீரென்று பெர்லினில் தரையிறங்குவதற்கு அனுமதி கோரியுள்ளது. அதன்பின்பு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ஜெர்மன் நாட்டின் பெடரல் காவல்துறையினர், உடனடியாக அந்த விமானத்தை சூழ்ந்து மோப்ப நாய்களுடன் விமானத்திற்குள் சோதனை செய்துள்ளார்கள். அதில் எந்தவித ஆபத்து இல்லை என்று உறுதி செய்துள்ளனர். அதன்பின்பு பயணிகள் அனைவரும் அதிகாலை 4 மணியளவில் வேறு விமானத்தின் மூலம் அனுப்பப்பட்டுவிட்டார்கள்.

ஆனால் விமானம் திடீரென்று தரையிறக்கப்பட்டதற்கான காரணம் என்ன? என்று அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. எனினும் Bild என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |