சூப்பரான முந்திரி பக்கோடா செய்யலாம் வாங்க ..
தேவையான பொருட்கள்:
முந்திரி பருப்பு – 50 கிராம்
கடலை மாவு – 1/2 கப்
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடலை மாவுடன் முந்திரி பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த் தூள் மற்றும் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்துக் கொள்ள வேண்டும் . பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, பிசறிய மாவை உதிர்த்து போட்டு பொன் நிறமாக வறுத்து எடுத்தால் சூப்பரான முந்திரி பக்கோடா தயார் !!!