மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
14-வது ஐபிஎல் தொடரில் பாதுகாப்பு வளையத்தையும் மீறி ,ஒரு சில வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் , எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, 13 வது ஐபில் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வீரரான சுரேஷ் ரெய்னா ,ஒரு போட்டியை கூட விளையாடாமல் நாடு திரும்பினார். இதற்கு காரணமாக சுரேஷ் ரெய்னாவுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் அறையில் பால்கனி இல்லாததால், அணி நிர்வாகத்துடன் பிரச்சினை ஏற்பட்டு போட்டியிலிருந்து வெளியேறியதாக பேசப்பட்டது.
ஆனால் அவர் தனிப்பட்ட காரணத்திற்காக போட்டியில் இருந்து வெளியேறினார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவதால், இதில் சுரேஷ் ரெய்னா விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டும் இதே போன்ற ஒரு சூழ்நிலையில் தான் அவர் தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் இதை குறிப்பிட்டு ,நெட்டிசன்கள் ரெய்னாவை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்களை வைரலாகி வந்தன. இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில் “சீ யூ சூன் துபாய்” என்று தோனியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் .இதன் மூலம் அவர் ,இந்த போட்டியில் விளையாடுவார் என்பதை உறுதி செய்துள்ளார்.
See you soon Dubai 💪🏏 @msdhoni @IPL @ChennaiIPL pic.twitter.com/5nWAZZ5BqJ
— Suresh Raina🇮🇳 (@ImRaina) May 29, 2021