நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மலையாள திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான செகண்ட் ஷோ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துல்கர் சல்மான். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சார்லி, உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேய்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் நடிகர் துல்கர் சல்மான் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன்பின் இவர் நடிப்பில் வெளியான ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
So, I am not on on Clubhouse. These accounts are not mine. Please don’t impersonate me on social media. Not Cool ! pic.twitter.com/kiKBAfWlCf
— Dulquer Salmaan (@dulQuer) May 31, 2021
தற்போது இவர் பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் அதிக கணக்குகளில் இல்லை. இந்த கணக்குகள் என்னுடையவை அல்ல. தயவுசெய்து என்னை சமூக ஊடகங்களில் ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம்’ என தெரிவித்துள்ளார்.