Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்காத கிராமம்..!!

போலந்து நாட்டில் ஒரு கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்காதது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

போலந்து நாட்டில் உள்ள மியெஜ்சே ஆட்ர்ஸான்ஸ்கீ (Miejsce Odrzanskie)) என்ற கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தைப் பிறப்பையே பார்க்கவில்லை. கடைசியாக அக்கிராமத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து பிறந்த 12 குழந்தைகளும்   பெண் குழந்தைகளாகவே பிறந்தன.

இப்படி பெண் குழந்தைகளாகவே பிறப்பது அந்த கிராமத்தின் சூழ்நிலை அல்லது மரபணுவின்  தொடர்ச்சி காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அந்த கிராமத்தினர்கள் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டி  பல பெண்களும் தங்களது உணவுப் பழக்கவழக்கம் உள்ளிட்ட பல மாற்றங்களை  செய்து வந்த போதும் பெண் குழந்தைகள் பிறப்பே அதிகரித்துள்ளது.

The all-girl young volunteer firefighters team in the village of Miejsce Odrzanskie, Poland.

இதற்கு மாறாக போலந்தில் கடந்த 2017-ல் பிறந்த குழந்தைகளில் 1,96,000 பெண் குழந்தைகளுக்கு 2,07,000 ஆண் குழந்தைகளாக பிறப்பு விகிதம் இருந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |