சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டினால் அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் மீது தொடர்ச்சியான புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் சட்டிங், ஸ்க்ரீன் ஷாட் ஆகியவை வந்த வண்ணம் உள்ளன. இதில் சில ஆசிரியர்களின் வேதனையும் உள்ளடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்காப்பு கலை சிறப்பு பயிற்சி கொடுப்பதாக கூறி மாணவிகளை பள்ளி தனி அறைக்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக பத்மா சேஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் கெவின் ராஜ் மீது அவரது நண்பர்கள் 3 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் வெளியூர் போட்டிகளுக்கு செல்லும் போது மாணவிகளுக்கு தன் நண்பர்களையும் அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.