Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் போக்குவரத்து…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய பகுதியாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்ட சேலம் – சென்னை இடையேயான விமான போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான அட்டவணையின் அடிப்படையில் சென்னை விமானங்கள் இயக்கப்படும். விமானத்தில் பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |