Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அலறி துடித்த பெற்றோர்… 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்…!!

1 1/2 வயதுடைய சிறுவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடகரை தாயனூர் கிராமத்தில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய ஹரிராம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சிறுவன் ஹரிராம் வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றுப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் அலறி சத்தம் போட்டுள்ளனர்.

அந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் மூழ்கி உயிரிழந்த ஹரிராமின் உடலை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன்பின் உயிரிழந்த குழந்தை ஹரிராமின் உடலைப் பார்த்து பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Categories

Tech |