Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல் கட்டணம் உயர்வு… அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் இன்று முதல் உள்நாட்டு பயணத்துக்கான விமான கட்டணம் உயர்த்தப்படுகிறது. அடிப்படை கட்டணத்திலிருந்து 13 முதல் 16 சதவீதம் வரை அதிகரிக்க படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 40 நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் இலக்கை அடையும் விமானங்களில் செல்ல குறைந்தபட்ச கட்டணம் ரூ.3300 ஆக இருக்கும். 60 முதல் 90 நிமிடங்கள் பயண தூரம் கொண்ட விமானங்களில் செல்ல நான்காயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. பயண தூரம் களின் அடிப்படையில் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இனி எளிதாக செல்ல வேண்டுமென்றால் டெல்லியிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் பயணிக்க தற்போது செலுத்துவதை விட கூடுதலாக 700 ரூபாய் செலவழிக்க வேண்டும். 40 நிமிடங்களில் இலக்கை அடையும் விமான பயணத்திற்கு ரூ.3,300, 60 முதல் 90 நிமிடங்களில் இலக்கை அடையும் விமான பயணத்திற்கு ரூ.4 ஆயிரம், 90 முதல் 120 நிமிடங்கள் ரூ,4,700, 150 முதல் 180 நிமிடங்கள் ரூ.6,100, 180 முதல் 210 நிமிடங்கள் பயணிக்க ரூ 7,400 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல் மும்பை பயணிக்க தற்போது செலுத்துவதை விட கூடுதலாக 700 ரூபாய் வசூலிக்க வேண்டும்.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் விமான போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது இந்த கட்டண உயர்வுக்கு காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் உள்நாட்டு விமான கட்டணத்தில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வரையறைகளை மாற்றி அமைக்கப்பட்டன. அப்போது 10 முதல் 13 சதவீதம் வரை விலை ஏற்றம் இருந்த நிலையில், மீண்டும் மூன்றே மாதத்தில் கட்டணம் 13 முதல் 16 சதவீதம் வரை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |