Categories
தேசிய செய்திகள்

கடன் வாங்கிக்கோங்க…. ரூ 70,000,00,00,000 ஒதுக்கீடு…. ”வீடு,கார் வட்டி குறைப்பு” மத்திய அரசு உறுதி ..!!

பொதுத்துறை வங்கிகளுக்கு 70,000 கோடி அரசு சார்பில் ஒதுக்கப்படுமென்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சி அடைந்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தன. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுகையில் , நிறுவனங்கள் ஆரம்பிக்க பலரிடம் இருந்து பெறப்படும் பணத்துக்கு வசூலிக்கப்பட்டு வந்த Angel Tax ரத்து செய்யப்படுகிறது.ஒரே தவணையில் கடனை திரும்ப செலுத்தும் முறையில் வெளிப்படைத் தன்மை கொண்டு வந்து , குறு, சிறு, நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு உதவ வேண்டும்.

கடனை திரும்ப செலுத்திய 15 நாள்களுக்குள் , கடன் வாங்கியவரின் ஆவணங்களை வங்கிகள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.வங்கிகளின் மறுமூலதனத்துக்காக அரசு சார்பில் இருந்து ரூ.70, 000 கோடி உடனடியாக ஒதுக்க நடவடிக்கை.வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை.CSR விதிமீறல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்படாது . வங்கிகளில் கார் மற்றும் வீட்டிற்கான வட்டிவீதம் குறைக்கப்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உறுதியளித்துள்ளார்.

Categories

Tech |