Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 7ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என தொடக்க பள்ளி இயக்குனர் அறிவித்துள்ளார். பள்ளிகள் திறந்த உடன் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |