அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று நேற்று மதியம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சிக்கலூன் நகருக்கு வடக்கே நேற்று 74 கிலோ மீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று மதியம் 12.29 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த நிலநடுக்கம் 41.3 கிலோமீட்டர் ஆழம் மையத்திலும், ரிக்டரில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு இந்த நிலநடுக்கத்தினை பற்றி தெரிவித்துள்ளது. இருப்பினும் பொருள் இழப்புகள் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ளதா ? என்பது பற்றிய எந்த தகவல்களும் இன்னும் வெளிவரவில்லை.